Connect with us

நீண்ட நேரம் காத்திருந்தும் காயாத மைதானம் இந்தியா – கனடா போட்டி ரத்து..!!

Featured

நீண்ட நேரம் காத்திருந்தும் காயாத மைதானம் இந்தியா – கனடா போட்டி ரத்து..!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – கனடா அணிகள் இன்று மோத இருந்த நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் ரத்தாகி உள்ளது .

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சிறப்பாக தற்போது வரை சிறப்பாக விளையாடி உள்ள இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் கெத்தாக நுழைந்துள்ளது.

இந்நிலையில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் கனடா அணிகள் இன்று விளையாட இருந்தன. ஆனால் இப்போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்ய ஆரம்பித்ததால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது .

நீண்ட நேரம் ஆகியும் மைதானம் காயாமல் இருந்ததால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top