Connect with us

ஊரெல்லாம் வெந்த பருப்பு தமிழ்நாட்ல வேகலயேப்பா – தமிழகத்தில் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ஊரெல்லாம் வெந்த பருப்பு தமிழ்நாட்ல வேகலயேப்பா – தமிழகத்தில் சலார் படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளியினான சலார் படம் தமிழகத்தில் செய்த மொத்த வசூலின் விவரம் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப்.என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல் . இவரின் அடுத்த படத்திற்காக அனைவரும் வெறித்தனமாக காத்திருந்த நேரத்தில் சலார் என்ற மாஸ் படஜெட் படத்தை மாபெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கியுள்ளார் .

கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் இல்ல திரையரங்குகளில் வெளியானது.

பிரபாஸ் – பிரசாந்த் நீல் – பிருத்விராஜ் என முப்பெரும் காம்போவில் உருவான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் பட்டைய கிளப்பி கிளப்பியது . அந்தவகையில் இப்படம் இதுநாள் வரை உலகம் முழுவதும் சுமார் ரூ 615 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியான இப்படம் மற்ற மொழிகளில் நல்ல வசூலை ஈட்டினாலும் தமிழில் மிக குறைவான வசூலை செய்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

அந்தப்படி இப்படம் தமிழகத்தில் சுமார் ரூ 22 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம் தமிழகத்தில் மட்டுமே 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்த நிலையில் அதில் பாதி கூட வசூல் செய்யாமல் இருந்தது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கேப்டன்’ நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!!

More in Cinema News

To Top