Connect with us

துயரத்தில் இருக்கும் கேரள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் பிரபாஸ் 2 கோடி நன்கொடை..!!

Cinema News

துயரத்தில் இருக்கும் கேரள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் பிரபாஸ் 2 கோடி நன்கொடை..!!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் , திரை பிரபலங்கள் என பலரும் நிதியுதவி செய்து வரும் நிலையில் தற்போது கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30 ஆம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியும் மீப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த கோர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் . பொதுமக்கள் என பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் .

இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top