Connect with us

ஒன்றொன்றும் பயங்கரம் போங்க – மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது கேப்டன் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

ஒன்றொன்றும் பயங்கரம் போங்க – மிரட்டலான காட்சிகளுடன் வெளியானது கேப்டன் படத்தின் ட்ரைலர்..!!

தனுஷின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியன் ப்ருஸ் லீ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ் . இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படு பயங்கரமாக எடுக்கப்பட்டுள்ள படம் கேப்டன் மில்லர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுசுடன் முதன்மை கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்க பிற முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் படு பயங்கரமான ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது .

காட்சிக்கு காட்சி படு பயங்கரமாக இருக்கும் இப்படம் நம்மை ஆண்ட வெள்ளையர்களுக்கும் , தமிழர்களுக்கும் இடையேயான பிரச்னை குறித்த கதைக்களம் என்பது இந்த ட்ரைலர் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளை கொண்டுள்ள இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படமும் ரசிகர்களின் முழு ஆதரவை பெற்று வெற்றி பெறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

More in Cinema News

To Top