Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் பிரபாஸின் கல்கி 2898 AD..!! முதல் நாள் வசூலே 200 கோடியா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் பிரபாஸின் கல்கி 2898 AD..!! முதல் நாள் வசூலே 200 கோடியா..?

பிரபாஸ் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள கல்கி 2898 AD திரைப்படம் வசூலில் பட்டய கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் நடிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 AD . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பட்டானி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் ஒன்று கூடி நடித்துள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் தமிழ் , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது .

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு - மறுபரிசீலனை செய்ய முத்தரசன் வேண்டுகோள்..!!

More in Cinema News

To Top