Connect with us

அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Cinema News

அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் எப்போ ரிலீஸ் தெரியுமா – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ரிலீஸ் குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநரான பா.ரஞ்சித்தின் சொந்த தயாரிப்பு நிர்வாணமான நீலம் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.

கிராமத்து கதைக்களம் கொண்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் , மேலும் இவர்களுடன் சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் சரசரவென முன்னேறி வரும் அசோக் செல்வனின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் அசோக் அவர்களுக்கு வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல இளம் இசையமைப்பாளர் சென்னையில் உயிரிழப்பு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!

More in Cinema News

To Top