Connect with us

பதிரானாவை வைத்து சொல்லி அடித்த தோனி – சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை..!!!

Featured

பதிரானாவை வைத்து சொல்லி அடித்த தோனி – சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை..!!!

ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அவர்களது மண்ணிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி கெத்து காட்டியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் CSK – MI அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரஹானே களமிறங்கினர் . இதில் மாற்றத்தை கொண்டு வருவார் என்று முதலில் களமிறங்கப்பட்ட ரஹானே 5 ரன்களில் அட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார் .

மறுபுறம் அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் தாறுமாறான ரன் குவிப்பில் ஈடுபட்டார் . மறுபக்கம் ஆடிய ரச்சின் 21 ரன்களில் வெளியேற அடுத்து வந்த டுபேவுடன் கேப்டன் ருதுராஜ் கைகோர்த்தார் . சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர் .

பின்னர் கடைசி ஓவரில் களத்திற்கு வந்த தோனி வந்த வேகத்தில் 3 சிறப்பான தரமான ஹார்டிக் சிக்ஸர்களை அடித்து சென்னை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 206 ரன்களை குவித்தது . இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர் . இந்த ஜோடி ஆரம்பம் முதல் அதிரடி காட்டி சென்னை அணிக்கு சிறிய பயத்தை ஏற்படுத்தியது .

சிறப்பாக விளையாடி இஷான் கிஷனை 8-வது ஓவரில் 23 ரன்களில் வெளியேற்றினார் பத்திரனா . அதே ஓவரில் சூர்யகுமார் யாதவை டக் அவுட் செய்தார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோகித் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் . இந்த பக்கம் பொறுப்புடன் ஆடி வந்த திலக் வர்மாவை 31 ரன்களில் பதிரனா வெளியேற்றினார் . பின்னர் நின்று ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் 16 மற்றும் 17-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

கடைசி மூன்று ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்டை போல்ட் செய்தார் பதிரனா. கடைசி ஓவரில் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்திய போதிலும் மும்பை அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டது .

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழந்த மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top