Connect with us

அனல் பறக்கும் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..!!!

Featured

அனல் பறக்கும் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..!!!

ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார் . இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி தற்போது பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் தோனியும், ரோஹித் சர்மாவும் கேப்டன்களாக இல்லாமல் CSK vs MI மோதும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 2 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 2 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top