Connect with us

புத்தம்புது தொழில் நுட்பத்தில் வெளியாகிறது தனுஷின் கேப்டன் மில்லர் – வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

புத்தம்புது தொழில் நுட்பத்தில் வெளியாகிறது தனுஷின் கேப்டன் மில்லர் – வெளியான டக்கர் தகவல்..!!

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் புதிய தொழில் நுட்பத்துடன் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷின் முரட்டு தனமான நடிப்பில் பட்டாசாக உருவாகி உள்ள திரைப்படம் படம் கேப்டன் மில்லர்.

மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் குளோபல் ஸ்டார் தனுஷுடன் பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் டாப்பு டக்கராக தயாராகி உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இதுமட்டுமின்றி இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தற்போது பரபரப்பாக ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.

IMAX தொழில் நுட்பத்தில் வெளியாகும் 4வது தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபாஸின் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top