Connect with us

ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய தளபதி 68 படக்குழு – படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை கண்டு கையசைத்த விஜய்..!!

Cinema News

ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய தளபதி 68 படக்குழு – படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை கண்டு கையசைத்த விஜய்..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் கூட்டம் குவிந்து நிற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது .

இந்திய சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் THE GOAT .

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி தளபதியின் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்றது

நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ரசிகர்கள் தற்போது படப்பிடிப்பு தளத்திற்கே சென்று படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் .

இதையடுத்து ரசிகர்களை கண்டதும் தளபதி விஜய் வருகை தந்து சிரித்தபடி கையசைத்து பத்திரமாக போய்ட்டு வாங்க என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளை தான் வேணும் - திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

More in Cinema News

To Top