Connect with us

நாளை வெளியாகிறது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர்..!!

Cinema News

நாளை வெளியாகிறது அசோக் செல்வனின் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ட்ரெய்லர்..!!

அசோக் செல்வன் , கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குநரான பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.

கிராமத்து கதைக்களம் கொண்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மீடியம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பையும் தற்புது படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் ட்ரைலர் (ஜனவரி 10 ஆம் தேதி) நாளை மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில் சரசரவென முன்னேறி வரும் அசோக் செல்வனின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் அசோக் அவர்களுக்கு வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் - ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top