Connect with us

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்..!!

Cinema News

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்..!!

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜிகாந்த்தை கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார் .

இவர்களின் காதலுக்கு ஆதாரமாக யாத்ரா , லிங்கா என இரு ஆண் குழந்தைகளை இருவரும் பெற்றெடுத்தனர்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க திடீரென இருவரும் தங்களது திருமண வாழ்வை முறித்துக்கொள்ளவதாக அறிவித்தனர் . இவர்களை சேர்த்து வைக்க இருவீட்டாரும் எத்தனையோ முறை முயன்ற போதிலும் இருவரும் சேர்ந்து வாழ முன்வரவில்லை.

இந்நிலையில் விவாகரத்து கோரி இருவரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அவர்களுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவகாரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பரஸ்பரம் விவாகரத்தை இருவரும் கோரிய நிலையில், 2004ம் ஆண்டு நடந்த திருமண பதிவை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் மீண்டும் கார் பந்தயத்தில்! 15 ஆண்டுகளுக்குப் பின் உறுதிப்படுத்திய வீடியோ..

More in Cinema News

To Top