Connect with us

“தரமான ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்! வீட்டிற்குள் வரும் புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள்! ஆனால்..!”

Bigg Boss Tamil Season 7

“தரமான ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்! வீட்டிற்குள் வரும் புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள்! ஆனால்..!”

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது ஒரு பெரும் திருப்பமாக மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில் அவர்களில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகிவிட்டனர்.

தினேஷ், பிராவோ மற்றும் அர்ச்சனா ஆகிய மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்களுடன் தற்போது பிக் பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மூன்று வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு பதில் ஏற்கனவே இருக்கும் மூன்று பேர் வெளியேறுவார்கள் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. அதிரடியாக உள்ளே வரும் 3 வைல்ட்கார்டு போட்டியாளர்கள் வென்றால் பிக் பாஸில் தொடரலாம் என்றும் தோற்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வழி விட்டு வெளியேற வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் மூன்று போட்டியாளர்கள் வெளியேறுவார்களா? அல்லது 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top