Connect with us

Content கொடுப்பவர்கள் எல்லாரும் நாமினேஷன் ஆகிட்டாங்க..அப்போ யார் வெளில போவாங்க??

Bigg Boss Tamil Season 7

Content கொடுப்பவர்கள் எல்லாரும் நாமினேஷன் ஆகிட்டாங்க..அப்போ யார் வெளில போவாங்க??

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 50 நாட்கள் நிறைவடைந்துவிட்டது…மிகவும் தீவிரமாக இந்த ஆட்டம் இருந்து வருகின்றது,இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மீதி இருக்கின்றனர்…

அவர்கள் இடையே நிறைய சண்டையை மூட்டிவிடும் வகையில் பல விதமான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ் அதுவே இப்போது ஆட்டம் சூடு பிடிக்கும் வண்ணம் இருக்கின்றது…அந்த வகையில் இந்த வாரம் அவர் கொடுத்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீடே ஓம் கடுப்பில் இருக்கின்றது…ஏனெனில் இந்த வாரம் மேலும் 3 வைல்டு கார்டு எண்ட்ரி உள்ளே வர உள்ளார்களாம்.

அந்த வகையில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வரும் போட்டியாளர்களுடன் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நடக்கும் போட்டியில் அவர்கள் மூவரையும் வீழ்த்தி விட்டால் பிக்பாஸ் போட்டியாளர்கள் போட்டியில் தொடரலாம்.

அப்படி ஒருவேளை வீழ்த்த மிஸ் ஆகிவிட்டால் வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பிவிட்டு தோற்றவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளார் பிக்பாஸ்…இதனால் அனைவரும் வெற்றியை நோக்கியே ஆடி வருகின்றனர்…

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆகி உள்ள போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது…அதுவும் வைரலாக பேசப்பட்டு வருகின்றது அதில் மணி, மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விசித்ரா, ரவீனா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர்….

இதனை தவிர பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருந்து கொண்டு வரும் போட்டியாளர்களான பிராவோ மற்றும் அக்‌ஷயாவும் வெளிய போக நாமினேட் ஆகி இருக்கின்றனர் அதிகபட்சம் பூர்ணிமா,அக்ஷ்யா,பிராவோ இவர்களில் ஒருவர் போகத்தான் வாய்ப்பு இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top