Connect with us

“சொருகிடுவன்..! வெளிய போடி..! அர்ச்சனாவை தரக்குறைவாக பேசிய நிக்சன்!”

Bigg Boss Tamil Season 7

“சொருகிடுவன்..! வெளிய போடி..! அர்ச்சனாவை தரக்குறைவாக பேசிய நிக்சன்!”

பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரவென சென்று கொண்டிருக்கிறது. 66ம் நாளான நேற்று, கலாட்டா கல்லூரி டாஸ்க்கில் டீச்சரான அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற தலைப்பின் கீழ் பாடம் எடுத்தார். அப்போது பூர்ணிமா, மாயா, நிக்சன், விசித்ரா ஆகியோர் ஒரே கேங் என்று கூறி, தனித்தனியாக ஒவ்வொருவரையும் விமர்சனம் செய்தார்.

இதனையடுத்து பேச வந்த நிக்சன் அர்ச்சனாவை டார்கெட் செய்து, விசித்ரா உடனான உறவில், முகத்திற்கு முன்னால் ஒன்று பேசி விட்டு, கமல் சாரிடம் வேறு மாதிரியாக பேசுவதாக கூறினார். இதைக்கேட்டு டென்ஷனான அர்ச்சனா நிக்சனை நேராக அணுகி, நான் எப்போது அப்படியெல்லாம் நடந்து கொண்டேன் என்று கேட்டார்.

அதற்கு நிக்சன் விளக்கம் கொடுக்க, அதற்கு எதிராக அர்ச்சனா பேச, விளக்கம் சண்டையில் சென்று முடிந்தது. இந்த சண்டையில் தொடர்ச்சி இன்றைய தினமும் நிச்சயமாக இருக்கும் என்பதை இன்று வெளியான பிக்பாஸ் புரமோக்கள் வெளிமிட்டு காட்டி விட்டன.

முன்னதாக, போட்டியில் இருந்து வெளியேறிய வினுஷாவை உருவக்கேலி செய்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தனக்கு சாதகமாக அர்ச்சனா பயன்படுத்திக்கொள்ள, அதை கேட்டு டென்ஷனான நிக்சன்.. சொருவி விடுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top