Connect with us

“உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது..! கடும் கோபத்தில் பூர்ணிமா..! வெளியான Promo Video!”

Bigg Boss Tamil Season 7

“உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது..! கடும் கோபத்தில் பூர்ணிமா..! வெளியான Promo Video!”

விச்சுவாவது கிச்சுவாவது உனக்கெல்லாம் இனிமேல் மரியாதையே கிடையாது என மாயாவிடம் பூர்ணிமா பயங்கர கோபத்துடன் கூறிய காட்சியின் வீடியோ மூன்றாவது புரமோவாக வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீடு பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு பின்னர் இரண்டு குரூப்பாக பிரிந்துள்ளது.

மாயா, பூர்ணிமா, ஐஷு, ரவீனா, மணி சந்திரா, சரவணன் விக்ரம், நிக்சன் ஆகியோர் ஒரு குரூப்பாகவும் விசித்ரா, அர்ச்சனா, கூல் சுரேஷ், தினேஷ் ஒரு குரூப்பாகவும் உள்ளனர். பிக் பாஸ் விளையாட்டில் இருக்கிறோமா இல்லையா என்று கூட தெரியாமல் பாலா, பிராவோ ஆகியோர் எந்த குரூப்பிலும் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில் மாயா – பூர்ணிமா குரூப்புக்கும் விசித்ரா – அர்ச்சனா குரூப்புக்கும் இடையே காரசாரமாக சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் மாயாவிடம் பூர்ணிமா ’விசித்ரா சொன்ன வார்த்தை தன்னை ரொம்ப புண்படுத்தி விட்டதாகவும் இனிமேல் விச்சுவாவது கிச்சுவாவது, அவங்களுக்கு மரியாதையே கிடையாது என்றும் கூறுகிறார். அதன் பிறகு ‘நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்று மாயா கூற இருவரும் அடுத்த திட்டத்திற்கு தயாராகின்றனர்.

இன்னொரு பக்கம் ’இங்கே உண்மையான அன்புக்கு இடம் இல்லை, எனக்கு தெரியும், என்னுடைய மனதிற்கு தெரியும் நான் யார் என்று’ என அர்ச்சனாவிடம் விசித்ரா புலம்புகிறார். மொத்தத்தில் இனிமேல் தான் இரண்டு குரூப்புகளுக்கும் செம போர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top