Connect with us

“என் காதுலயே பூ வைக்குறீங்களா? வசமாக சிக்கிய பூர்ணிமா! Viral Promo!”

Bigg Boss Tamil Season 7

“என் காதுலயே பூ வைக்குறீங்களா? வசமாக சிக்கிய பூர்ணிமா! Viral Promo!”

உலகநாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவை வறுத்தெடுத்த காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வாரம் பூர்ணிமா மற்றும் மாயா பேசிக் கொண்டிருந்தபோது ’கமல் சார் என்ன கேட்டாலும் அந்த நேரத்தில் ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.

அதை சுட்டி காட்டிய கமல்ஹாசன் ’என்ன வேணும்னாலும் நீங்க சொல்லுவிங்க நான் கேட்டுப்பேனா.. சொல்லுங்க.. ஏ பூ கொண்டு வாங்கப்பா.. யாரு காதுல வைக்கிறதுன்னு நீங்க சொல்லி முடித்ததும் தான் முடிவு பண்ணனும்.

எங்க காதுல வைக்க முடியாது, ஏன்னா இங்க 3 கோடி பேர் இருக்கோம். அதாவது உங்களுடைய திட்டம் வந்து நான் கேட்கும் போது பொய் சொல்லி சமாளிக்கலாம் என்பதுதான்’ என்று கூறினார்.

அதற்கு பூர்ணிமா ’சமாளிக்கலாம் என்று நினைத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லி சமாளிக்கலாம் என்று சொன்னேன் சார்’ என்று சொல்ல ’நீங்க இப்ப அதைத்தான் பண்ணிட்டு இருக்கீங்க’ என்று கமல் கூறினார். மொத்தத்தில் இன்றைய எபிசோடில் பூர்ணிமாவுக்கு செம திட்டு இருக்கிறது என்பது இந்த புரமோ மூலம் உறுதியாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top