Connect with us

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் விவாதிக்கப்பட்ட நிக்சன் – ஐஷு விவகாரம் – மாயாவின் செயலால் செம காண்டில் நிக்சன் – ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் விவாதிக்கப்பட்ட நிக்சன் – ஐஷு விவகாரம் – மாயாவின் செயலால் செம காண்டில் நிக்சன் – ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள இரண்டாவது ப்ரோமோ சற்று எமோஷனலாகவும் இறுதியில் தீயாகவும் அமைந்துள்ளது.

பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில் இந்த சீசன் ஆரம்பித்து 75 நாட்கள் முடிவடைந்து உள்ளதை கொண்டாடும் விதமாக போட்டியாளர்கள் அனைவர்க்கும் இனிப்புகள் தடபுடலான விருந்துகள் என பல மேட்டர்களை பிக் பாஸ் இறக்கியுள்ளார் .

இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இந்த 75 நாட்களில் உங்கள் பயணம் எப்படி இருந்தது என சொல்லும்படி பிக் பாஸ் கூற போட்டியாளர்கள் சற்று எமோஷனலாக பேசுவது போல் தெரிகிறது . இதையடுத்து ஆட்டம் பாட்டம் பிக் பாஸ் வீடு மகிழ்ச்சியில் இருக்க ப்ரோமோ அபப்டியே முடிகிறது.

இதையடுத்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இந்த வீட்டில் தங்களது பயணம் குறித்து ஒவ்வருவராக கூறி வருகின்றனர் . அப்போது விஜய் வர்மா பேசிக்கொண்டிருக்கும் போது அவரது வீடு நியாபகம் வந்து அலுத்துவிடுகிறார் . இதையடுத்து விசித்ரா மீண்டும் அர்ச்சனாவின் குறை நிறைகளை கூறுகிறார் .

அடுத்ததாக பேச வந்த மாயா நிக்சன் மற்றும் ஐஷு குறித்து பேச பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் இவர்களின் காதல் விவகாரம் அடிபட்டதால் நிக்சன் செம கோபமடைந்து மாயாவிடன் விவாதிக்க முயல ப்ரோமோ அப்படியே முடிகிறது.

ஏற்கனவே வெளியில் சென்றவர்கள் பற்றி பிக் பாஸ் வீட்டுக்குள் பேச கூடாது என கமல்ஹாசன் ஸ்ட்ரிக்டாக கூறிருக்க தற்போது மாயா மீண்டும் நிக்சன் மற்றும் ஐஷு குறித்து பேசியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top