Connect with us

“நிக்சனை நான் தம்பி போல தான் நினைத்தேன்..! வெளுத்து வாங்கும் வினுஷா! வைரலாகும் Post!”

Bigg Boss Tamil Season 7

“நிக்சனை நான் தம்பி போல தான் நினைத்தேன்..! வெளுத்து வாங்கும் வினுஷா! வைரலாகும் Post!”

பெண்களுக்கு ஆபத்து என்று பிரதீப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிரதீப்பை விட ஆபத்தானவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக நேற்று போட்டியாளர்கள் சில விஷயங்களை பேசியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் அளித்த டாஸ்க் மூலம் பலரது உண்மையான முகம் வெளியே வந்துள்ளது.

குறிப்பாக நிக்சன் வினுஷாவை உருவ கேலி செய்து பேசியது குறித்து பேசியது மாயா கேங்கிற்கே சற்று அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் வினுஷா இது குறித்து தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் என்னிடம் நிக்சன் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது. எனக்கு முன்னாள் கிண்டல் செய்பவர்களை விட பின்னாடி கிண்டல் செய்தவர்கள் தான் அதிகம். நிக்சனை நான் எனது தம்பி போல தான் பார்த்தேன்.

ஆனால் என்னை உருவ கேலி செய்ததற்கு நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை, மன்னிப்பு கேட்டதாக அவர் கூறியது முற்றிலும் போய். என்னை உருவ கேலி செய்த நிக்சன் இனிமேல் மன்னிப்பு கேட்டாலும் அவர் நல்ல நபராக மாறிவிட முடியாது. மாயா, பூர்ணிமா, நிக்சன், ஜோவிகா, ஐஷு ஆகியவர்கள் பிரதீப்பை எதிர்த்து கடந்த வாரம் உரிமைக் குரல் எழுப்பிய நிலையில் இந்த பிரச்சனைக்கு உரிமை குரல் எழுப்பாதது ஏன்?

இது தொடர்பாக கமல்ஹாசன் இந்த வார இறுதியில் பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன். நிக்சனுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக விசித்ராவுக்கு எனது நன்றி’ என்று வினுஷா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top