Connect with us

தென்காசி கோர விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

Featured

தென்காசி கோர விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு முதலமைச்சர்

தென்காசி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (28.1.2024) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கியது .

காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திரு.போத்திராஜ் (வயது 32) த/பெ. மூக்கையா கோனார், திரு.வேல்மனோஜ் (வயது 30) த/பெ.கோபால், திரு.சுப்பிரமணியன் (வயது 29) த/பெ.பரமசிவன், திரு.கார்த்திக் (வயது 24) த/பெ.பட்டமுத்து, திரு.முத்தமிழ்செல்வன் (வயது 23) த/பெ.ராமமூர்த்தி, திரு.மனோ (வயது 19) த/பெ.மாரிச்சாமி ஆகிய 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சேப்பாக்கத்தில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற SRH பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா CSK..?

More in Featured

To Top