Connect with us

ரசிகர்களின் மனம் கவர்ந்த மிஷன் படம் இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ரசிகர்களின் மனம் கவர்ந்த மிஷன் படம் இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

அருண் விஜயின் தாறுமாறான நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் மிஷன் 1 படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

ம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜயின் மாஸான நடிப்பில் உருவான திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் கோலாகலமாக வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மெலோடி நாயகன் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உலககெங்கும் வெளியாகி உள்ளது .

தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொங்கல் ரேஸில் இருக்க , அருண் விஜயின் மிஷன் படமும் இந்த ரேசில் இணைந்து கெத்து காட்டியது .

இந்நிலையில் கேப்டன் மில்லர் அயலான் உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அருண் விஜயின் மிஷன் படத்துக்கும் அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் நச்சென்று கதைகளை தேர்ந்தெடுத்து அருண் விஜய் நடித்து வருவதாகவும் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தற்போது குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

More in Cinema News

To Top