Connect with us

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Featured

தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது .

அரசின் இந்த திடீர் உத்தரவுக்கு காரணம் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் தான் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

அந்தவகையில் தற்போது தமிழகத்தில் உள்ள 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் எஸ்.பி. பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் எஸ்.பியாக சீனிவாசபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் துணை ஆணையராக பாண்டியராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம்.

சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமனம்.

சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஷாலுக்கு மீண்டும் ஒரு தோல்வி படமா ..? - அதிர்ச்சி அளிக்கும் ரத்னம் படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம்

More in Featured

To Top