Connect with us

நாளை 2வது டி20 போட்டி: வெற்றி பயணத்தை தொடருமா சூர்யகுமாரின் இளம்படை..?

Featured

நாளை 2வது டி20 போட்டி: வெற்றி பயணத்தை தொடருமா சூர்யகுமாரின் இளம்படை..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ளது .

விறுவிறுப்பும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர் என்பதை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே நம்மால் பார்க்க முடிந்தது .

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. இருப்பினும் இன்று திருவனந்தபுரத்தில் பேய் மழை பெய்து வருவதால் நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்து வருகிறது.

நாளை நடைபெறும் போட்டியின்போது ஒருவேளை மழை ஏதும் பெய்யாமல் இருந்தால் எந்த அணி வெள்ளப்பிக்கிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top