Connect with us

“பூர்ணிமாவிடம் கண்ணீர் விட்டு அழுத விஷ்ணு” – அப்போ இவங்களுக்குள்ள சம்திங் சம்திங் இருக்கோ..!!

Bigg Boss Tamil Season 7

“பூர்ணிமாவிடம் கண்ணீர் விட்டு அழுத விஷ்ணு” – அப்போ இவங்களுக்குள்ள சம்திங் சம்திங் இருக்கோ..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வந்துள்ள மூன்றாவது புரோமோவில் விஷ்ணு – பூர்ணிமாவிடம் கண்ணீர் விட்டபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது தற்போது செம வைரல் ஆகி வருகிறது .

பிக் பாஸ் வீட்டின் லிவ்விங் ஏரியாவில் பூர்ணிமாவும் – விஷ்ணுவும் தனியாக பேசிக்கொண்டிருக்கின்றனர் அப்போது திடிரென கண்ணீர் விட்ட விஷ்ணு நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன் என்ன மன்னிச்சுரு பதிலுக்கு நீ என்ன கஷ்டப்படுத்தினால் எனக்கு ரொம்ப வலிக்குது என்று சொல்லி கண்ணீர் விடுகிறார் .

இதையடுத்து பூர்ணிமா நில்லுங்க விஷ்ணு பேசலாம் என்று கூற இல்ல என்னால பேச முடில நா கொஞ்சம் தனியாக இருக்கனும் என அவரது கட்டிலில் படுத்து அழுகிறார் அப்படியே அந்த ப்ரோமோவும் முடிகிறது.

இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் கலங்காமல் கெத்தாக இருந்து வந்த விஷ்ணு பூர்ணிமா முன் சிறுபிள்ளை போல் கலங்கி நின்றது இவர்களுக்குள் சம்திங் சம்திங் இருக்கிறது என கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top