Connect with us

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 10 பேர் பலியான பரிதாபம்

Fire_Accident

General News

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. 10 பேர் பலியான பரிதாபம்

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு பலர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியில் விஜய் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று பயங்கமான வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது.

இதனால் பட்டாசு ஆலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இதற்கிடையே வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in General News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top