Connect with us

இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை – மருத்துவர்களால் ஏற்பட்ட பெருங்குழப்பம்..!!

Featured

இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை – மருத்துவர்களால் ஏற்பட்ட பெருங்குழப்பம்..!!

பிரேசில் நாட்டில் மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கூறிய 8 மாத பெண் குழந்தை இறுதிச்சடங்கின்போது அசைந்ததால் அதிர்ச்சி அடைந்த உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது குழந்தை இறந்துபோனதால் குடும்பத்தினர் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை நம்பி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்து, சவப்பெட்டியில் வைத்திருந்தபோது, குழந்தையின் விரல்களில் அசைவு ஏற்பட்டுள்ளது.

உடனே பதறிப்போய் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியபோது குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் புகாரை பெற்றுக்கொண்ட அந்நாட்டு போலீசார் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top