Connect with us

வெல்லப்போவது குஜராத்தா – ராஜஸ்தானா..? ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை..!!!

Featured

வெல்லப்போவது குஜராத்தா – ராஜஸ்தானா..? ஜெய்ப்பூரில் இன்று பலப்பரீட்சை..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஜெய்ப்பூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் GT – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது

நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியில் வெற்றி 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 7 ஆம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top