Connect with us

“இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 8 பேர்..! இந்த வாரம் வெளியேறுவது யார்?!”

Bigg Boss Tamil Season 7

“இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 8 பேர்..! இந்த வாரம் வெளியேறுவது யார்?!”

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்ததால் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேஷன் செய்யும் இரண்டு போட்டியாளர்களை நேருக்கு நேராகவே தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த வாரம் 8 பேர் நாமினேஷனில் சிக்கி உள்ளனர். நீண்ட காலமாக நாமினேஷனில் இருந்து தப்பித்து இருந்த ஜோவிகாவும் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளார்.

இந்த வாரம் தினேஷ் நேரடியாக ஏற்கனவே நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை தவிர விக்ரம், பூர்ணிமா, அனன்யா, கூல் சுரேஷ், விசித்ரா, மணி சந்திரா மற்றும் ஜோவிகா என மொத்தம் 8 பேர் நாமினேஷனில் உள்ளனர்.

இதில் விக்ரமுக்கு 6 ஓட்டுகளும், பூர்ணிமாவுக்கு 4 ஓட்டுகளும், அனன்யா, கூல் சுரேஷ், மணி சந்திரா ஆகியோருக்கு தலா 3 ஓட்டுகளும் ,விசித்ரா மற்றும் ஜோவிகாவுக்கு 2 ஓட்டுகளும் கிடைத்துள்ளன. நாமினேஷனில் சிக்கிய இந்த எட்டு பேர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்த சீரியல் ஆக்டர், இப்போ போட்டியாளர்?

More in Bigg Boss Tamil Season 7

To Top