Connect with us

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது – செய்தியாளர் சந்திப்பில் அதிரடி காட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

Featured

தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது – செய்தியாளர் சந்திப்பில் அதிரடி காட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பேரிடர் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளிக்க செய்தியாளர்களை இன்று சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

  • தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய பேரிடர் நிதி 900 கோடி. ஏப்ரலில் 450 கோடி, டிச.12இல் மீதமுள்ள 450 கோடியும் வழங்கப்பட்டுவிட்டது . நிதியாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டிடம் பேரிடர் நிவாரண நிதியாக 813.15 கோடி இருந்தது.

  • தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு உடனடியாக உதவி செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் முழு ஒத்துழைப்பு வழங்கின.

  • மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு செய்யவில்லை; மழைக்கு முன் சென்னையில் 92% பணிகள் முடிந்தது என்றார்கள்; மழை பெய்த பின்னர் 42% பணிதான் முடிந்தது என்கிறார்கள் அப்படியானால் சென்னையின் உட்கட்டமைப்புக்காக வழங்கப்பட்ட பணத்தை முறையாக செலவு செய்யவில்லையா.

  • எந்த ஒரு மாநிலத்திலும், எந்த காலகட்டத்திலும், எந்த அரசாங்கமும், எந்த ஒரு பேரிடரையும் நாட்டின் தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை இருந்ததில்லை. தமிழ்நாட்டை 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் கடுமையாகப் பாதித்த சுனாமி கூட திமுக அங்கம் வகித்த அப்போதைய UPA அரசாங்கத்தால் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை.

  • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த ஆண்டும் வெள்ளம் தேங்கியதற்குக் காரணம், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து எந்த பாடமும் கற்கவில்லை என்பதனால் தான்.

  • 5 நாட்களுக்கு முன்னதாகவே அதி கனமழை குறித்து வானிலை மையம் எச்சரித்தது. ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் முன்பாக மழை தொடர்பாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது . சென்னை வானிலை ஆய்வு மையம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கி வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Featured

To Top