Connect with us

ராஜஸ்தான் பந்துகளை வெளுத்துவங்கிய நரேன் – கொல்கத்தா அணி 223 ரன்கள் குவிப்பு..!!!

Featured

ராஜஸ்தான் பந்துகளை வெளுத்துவங்கிய நரேன் – கொல்கத்தா அணி 223 ரன்கள் குவிப்பு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில்முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் KKR – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் – சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்னில் வெளியேறினார்.

மறுபுறம் அதிரடியில் மிரட்டிய நரேன் அரைசதம் கடந்து அசத்தினார். இந்த பக்கம் சிறப்பான ஆட்டத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷ்ரேயஸ் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் இலக்க ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நரேன் சதம் விளாசி அதிரடியான ரன்குவிப்பில் ஈடுபட இறுதி நேரத்தில் வந்த ரிங்கு அவர் பங்கிற்கு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 223 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

More in Featured

To Top