Connect with us

பொறுப்பற்ற அந்த அமைச்சரை நீக்கி விடுங்கள் முதல்வரே இல்லையேல் உங்களுக்கு தான் அவமானம் – நாராயணன் திருப்பதி

Featured

பொறுப்பற்ற அந்த அமைச்சரை நீக்கி விடுங்கள் முதல்வரே இல்லையேல் உங்களுக்கு தான் அவமானம் – நாராயணன் திருப்பதி

சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த பணிக்கு கட்சிகாரர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக மார்தட்டி கொள்ளும் தமிழக அரசின் அமைச்சர் பொய் பேசலாமா? என தமிழ்நாடு பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில், என்று நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும் என்று தேசப்பிதா காந்தியடிகள் கூறினார்.

பாஜக ஆளுகின்ற உத்தர பிரதேசத்தில் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி வகுப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு எதை நோக்கி செல்கிறது என்பது புரிகிறதா? என காரசாரமான டீவீட்டை பதிவிட்டிருந்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜின் ட்விட்டர் பதிவிற்கு பதில் கொடுத்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறிருப்பதாவது :

சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த பணிக்கு கட்சிகாரர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக மார்தட்டி கொள்ளும் தமிழக அரசின் அமைச்சர் பொய் பேசலாமா?

7 மணிக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களை பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது, வீட்டிலிருந்து பணியிடத்திற்கு நிறுவனமே அழைத்து செல்ல வேண்டும், இரவு 7 மணிக்கு மேல் நான்கு பெண்கள் இணைந்து பணியாற்ற வேண்டும், தரமான உணவு அளிக்கப்பட வேண்டும், பாலியல் தொல்லைகள் இல்லாத வகையில் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் இரவு நேர பணிக்கு வர மறுத்தால் பணியிலிருந்து நீக்க கூடாது, அப்படி நீக்கினால் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த உத்தரவை உத்தரபிரதேச அரசு விதித்திருக்கும் போது, எதையும் தெரிந்து கொள்ளாமல் ஏனோ, தானோ, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அமைச்சர் மனோதங்கராஜ் பதிவிட்டிருப்பது தமிழகத்திற்கு அவமானம். என்ன செய்வது நமக்கு வாய்த்த அமைச்சர் அவ்வளவு தான்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து இந்த பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற, ஒன்றும் தெரியாத அமைச்சரை நீக்கி விடுங்கள். இல்லையேல் உங்களுக்கு தான் அவமானம் என தனது ட்விட்டர் பதிவில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top