Connect with us

கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கின்றார்..தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் சொல்லிய முக்கிய தகவல்!

Politics

கேப்டன் விஜயகாந்த் நலமாக இருக்கின்றார்..தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் சொல்லிய முக்கிய தகவல்!

நடிகரும்,தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டதன் காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்…அவரின் உடல் நிலை ரொம்ப நாட்களாகவே மோசமான நிலையில் இருப்பது அனைவரும் அறிந்து இருப்போம்..

அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்…அவர்கள் அப்படி வெளியிட்ட அறிக்கை தான் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அதிர்ச்சி தந்தது…

அந்த வகையில் நேற்று காலை மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்…கடந்த 24 மணிநேரமாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் அவருக்கு இன்னும் 14 நாட்கள் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தது…விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு என செய்தி வெளியானது ரசிகர்கள் பதறிப்போயினர் அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனையும் செய்து வந்தனர்…பலரும் இதை பற்றி பேசி இருந்தனர்,அதனை போல பிரபலங்களும் இதனை சொல்லி இருந்தனர்..

இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் விரைவில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என கூறினார்…

அவர் மீண்டும் உங்களை சந்திப்பார் என்றும்,அவர் வெளியிட்ட இந்த வீடியோ விஜயகாந்தின் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில் அமைந்தது…அதனால் நிச்சயம் அவர் ஒகே என்று ரசிகர்கள் இப்போது இந்த வீடீயோவை வைரல் செய்து வருகின்றனர்…

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பேசினார்…அவர் கூறியதாவது விஜயகாந்த் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம். அவர் நலமாக தான் இருக்கின்றார்…நீங்கள் பயப்பட வேண்டாம்,உங்கள் கேப்டன் விரைவில் உங்களை சந்திப்பார் என சொல்லிய தகவல் தற்போது வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் - சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

More in Politics

To Top