Connect with us

அப்படி நா என்னங்க பண்ணிட்டேன் – ரவீனாவின் குடும்பத்தார் மீது குறை கூறிய மணி – வைரல் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

அப்படி நா என்னங்க பண்ணிட்டேன் – ரவீனாவின் குடும்பத்தார் மீது குறை கூறிய மணி – வைரல் ப்ரோமோ

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் ரவீனாவின் குடும்பத்தார் மீது மணி குறை கூறும் காட்சிகள் நிறைந்திருக்கிறது .

பிக் பாஸ் வீட்டில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த freeze task விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வவருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க சிரிப்பும் அழுகையும் கலந்த மிக்ஸட் எமோஷனலில் பிக் பாஸ் வீடு மூழ்கியுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் ரவீனாவின் உறவினர் மற்றும் அண்ணா நேற்று வருகை தந்திருந்தனர் . வந்தவர்கள் ரவீனாவை தனியாக கூட்டி சென்று இதுக்காகத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தியா உனக்கும் மணிக்கும் நடுவுல என்ன ஓடிட்டு இருக்கு உன்னோட விளையாட்டை நீ தனியாக விளையாடு என்று ஸ்ட்ரிக்டாக கூறினர்.

இதையடுத்து மணியிடம் சென்று நீங்க ரவீனாவை தனியாக அழைத்து பேசாதீர்கள் அவளை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் . இருவரும் அவரவர் விளையாட்டை தனியாக விளையாடுங்கள் என அறிவுரை கூறினர்.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் ரவீனாவின் குடும்பத்தார் மீது மணி குறை கூறும் காட்சிகள் நிறைந்திருக்கிறது.

இந்த ப்ரோமோவில் ரவீனாவிடம் உங்க வீட்ல இருந்து வந்தவங்க எல்லா தப்பையும் நான் தான் செய்தாக கூறுகின்றனர் . அப்படி நான் என்ன செய்துவிட்டேன் என அடுக்கடுக்கான குறைகளை கூற நீங்க அவங்கள மேலும் கோவப்பட வைக்குறிங்க என மணிக்கு புத்திமதி கூறுகிறார் அப்படியே ப்ரோமோவும் முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எழுந்து நில் தமிழா – நவம்பர் 5, TVK தலைவர் அறிவிப்பு

More in Bigg Boss Tamil Season 7

To Top