Connect with us

மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு மீண்டும் அமைச்சர் எல்.முருகன் போட்டி

L_Murugan_BJP

Politics

மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு மீண்டும் அமைச்சர் எல்.முருகன் போட்டி

ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளராக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் எல் முருகன் ஆகியோரை பாரதிய ஜனதா கட்சி இன்று அறிவித்தது.

தமிழகத்தின் நீலகிரியில் இருந்து 2024 மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சரான எல்.முருகன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நீலகிரியில் இதற்காக களப்பணி ஆற்றியும் வந்தார்.

இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார். இதனால் அவர் நீலகிரியில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளம் அஸ்வினி வைஷ்ணவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, 2019 ஆம் ஆண்டு தனது முதல் ராஜ்யசபா பதவிக்கு வைஷ்ணாவின் வேட்புமனுவை பிஜு ஜனதா தளம் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் - வானதி சீனிவாசன் கோரிக்கை

More in Politics

To Top