Connect with us

100 கோடி வசூலில் இனைந்த அரண்மனை 4 திரைப்படம் – செம குஷியில் படக்குழு..!!

Cinema News

100 கோடி வசூலில் இனைந்த அரண்மனை 4 திரைப்படம் – செம குஷியில் படக்குழு..!!

சுந்தர்.சி இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் 100 கோடி வசூலில் இணைந்துள்ளதாக டக்கர் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களுக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள அடுத்த படம் தான் அரண்மனை 4 . சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மற்ற பாகங்களில் இசையமைத்த ஹிப்ஹாப் ஆதி தான் அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்திற்கும் இசையமைத்துள்ளார் .

ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமன்றி 2024ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் அரண்மனை 4 திரைப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸை தொட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்திற்கு வந்த சோதனை - கோர்ட்டு வரை சென்ற விவகாரம்..!!

More in Cinema News

To Top