Connect with us

23 மாவட்டங்களில் இன்று இரவு சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..

Featured

23 மாவட்டங்களில் இன்று இரவு சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 23 மாவட்டங்களில் இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் தினமும் மழை பெய்து வரும் நிலையில் அடுத்து வரும் 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொது மக்கள் அனைவரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top