Connect with us

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா இல்லையா ? விஷ்னு கொடுத்த ஷாக்கிங் பதில்..

Bigg Boss Tamil Season 7

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா இல்லையா ? விஷ்னு கொடுத்த ஷாக்கிங் பதில்..

பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும் இருப்பிடமாக ஆகி விட்டது.

அந்த வகையில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் 7ம் சீசன் பைனல் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாதியில் வந்து அழுதுக்கொண்டே கடைசி வரை இருந்த அர்ச்சனா இறுதியில் டைட்டில் அடித்துவிட்டார் என அவருக்கு கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வலுத்து வருகின்றனர்.

டைட்டில் வென்ற அழுகை நாயகி அர்ச்சனாவுக்கு மொத்தம் 50 லட்சம் ருபாய் பணம் பரிசாக கொடுக்கப்பட்டது. அது மட்டுமின்றி அவருக்கு ஒரு காரும் பரிசளிக்கப்பட்டது.

அப்படியே இந்த பக்கம் இந்த சீசனில் போட்டியாளர்கள் மத்தியில் ஏகப்பட்ட காதல்களும் மலர்ந்தது. அதில் பூர்ணிமா மற்றும் விஷ்ணு இருவரும் சற்று அதிகமாகவே நெருக்கம் காட்டினார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஷ்ணு தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். அதில் பூர்ணிமா உடன் இருந்தது காதலா என கேட்கப்பட்டு இருக்கிறது.

எங்களுக்கு நடுவில் ஒரு bond இருந்தது. அவர் கேமராவுக்காக பல விஷயங்களை செய்தார். அவரை நம்பலாமா என எனக்கே சந்தேகம் எழுந்தது.

அதை பற்றி நானே வெளிப்படையாக கேட்டுவிட்டேன். எதாவது feeling இருக்கிறதா என நான் கேட்டேன், அதற்கு அவர் எதுவுமே சொல்லவில்லை. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன் என விஷ்ணு தெரிவித்து இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top