Connect with us

இந்து மக்கள் அடிமைப்படுத்தபட்டு வருகின்றனர் – திருமாவளவன் ஆவேசம்

Featured

இந்து மக்கள் அடிமைப்படுத்தபட்டு வருகின்றனர் – திருமாவளவன் ஆவேசம்

இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :

அப்பாவி இந்து மக்கள் அடிமை படுத்தபட்டு வருகின்றனர். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற ஜனநாயக மாண்புகள் சிதைக்கபட்டும்.

இந்திய மக்கள் கல்வி, சமத்துவம் , பாதுகாப்பு, விடுதலை, இட ஒதுக்ககீடு போன்ற அடிப்படை உரிமைகளை வேண்டி போராடாமல். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று இந்திய மக்களை கோஷமிட வைத்துள்ளனர்.

அயோத்தியில் நடைபெற்றது பொய்யை உண்மையாகவும், புராணத்தை வரலாற்றாகவும் மாற்றும் அவலம். ஜனநாயகத்தின் விழுமியங்களை காக்க வேண்டிய நெருக்கடி இந்திய நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்திய நாடெங்கும் ஜாதி, மதத்தின் பெயரால் வன்முறை கொடுமைகள் தலை விரித்தாடுகின்றன. ஆளுநர் ரவி இல்லை ஆர்.எஸ்.எஸ். ரவி. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்.ன் ஒட்டு மொத்த குரலாக ஒலிக்கிறார்.

தமிழ்நாடு மக்கள் ஒரு போதும் பாஜகவை ஆட்சி செய்ய விடமாட்டார்கள் பெரியார் பிறந்த மண்ணில் பாசிசன்களின் கபட நாடகம் எப்போதும் பலிக்காது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top