Connect with us

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

Weather

டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் தீவிர மழை இருக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

மழை காலம் ஆரம்பம் ஆனதில் இருந்து அடிக்கடி மழை என இருந்து வருகின்றது…அடுத்த 24 மணி நேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள்,புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கின்றது..

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவாகி இருக்கின்றது…

இது தற்போது விசாகப்பட்டனத்துக்கு தென்கிழக்கே சுமார் 510 கி.மீ, தொலைவில் நிலைகொண்டுள்ளது..விரைவில் மண்டலமாக மாறும் என சொல்லப்படுகின்றது..

இது முதலில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 17ம் தேதி வடமேற்கு வங்க கடல் பகுதியில் ஒடிசா கடற்கரைப் பகுதியில் நிலவக்கூடும்…

அதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இனி வரும் 24 மணிநேரத்தில் மழை கனமாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'காந்தாரா' 2ம் பாகத்தில் இணைகிறாரா நடிகர் மோகன் லால்..? வெளியான டக்கர் தகவல்..!!

More in Weather

To Top