Connect with us

மக்களே உஷார் : நாளை காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

Featured

மக்களே உஷார் : நாளை காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!!

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில்:

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை (நவ.14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து 16ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது .

அடுத்த சில நாட்களுக்கு சூறை காற்று வீசவும் வாய்ப்புள்ளதால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் வானிலை மோசமடைய வாய்ப்புள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top