Connect with us

பந்துவீச்சில் இறுக்கி பிடித்த டெல்லி அணி – லக்னோ அணி 167 ரன்கள் குவிப்பு..!!

Featured

பந்துவீச்சில் இறுக்கி பிடித்த டெல்லி அணி – லக்னோ அணி 167 ரன்கள் குவிப்பு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் DC – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது . அதன்படி டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் – கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டி காக் இந்த போட்டியிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் .

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார் அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 3 ரன்களில் வந்த வழியில் அப்படியே திரும்பி சென்றார் .

பின்னர் கடைசி கட்டத்தில் சீறிய ஆயுஷ் பதோணி 55 ரன்கள் எடுக்க லக்னோ அணியின் ஸ்கோர் ஓரளவு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வந்தது .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 167 ரன்கள் குவித்துள்ளது . இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது டெல்லி அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Featured

To Top