Connect with us

அண்ணனுக்காக களத்தில் இறங்கிய சண்முக பாண்டியன் – கண்ணீரில் மூழ்கிய தொண்டர்கள்..!!

Featured

அண்ணனுக்காக களத்தில் இறங்கிய சண்முக பாண்டியன் – கண்ணீரில் மூழ்கிய தொண்டர்கள்..!!

எதிர்வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது தம்பி சண்முக பாண்டியன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கேப்டன் விஜயகாந்தை நினைத்து கண்ணீர் விட்ட ரசிகர்களால் அந்த இடமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது . இதற்காக அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் .

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரன்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்‌.

முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சண்முக பாண்டியனுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சண்முக பாண்டியனை காண வந்த தொண்டர்கள் அவரை கண்டதும் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர் .

இதையடுத்து பேசிய சண்முக பாண்டியன் கூறியதாவது :

இதுதான் என்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரம் . என்னுடைய அண்ணனுக்காக நான் வந்திருக்கிறேன் அச்சு அசலாக என்னுடைய அப்பா சாயலில் இருக்கும் என்னுடைய அண்ணனை வெற்றி பெற வைத்தாலும் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும் என சண்முக பாண்டியன் கூற அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என கூறினர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top