Connect with us

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கூல் சுரேஷ் – வெளியான கலக்கல் ப்ரோமோ

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் கூல் சுரேஷ் – வெளியான கலக்கல் ப்ரோமோ

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வெளியில் சென்ற பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் வர தொடங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் கடந்த சீசன்களை போல் இந்த முறையும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வர தொடங்கியுள்ளனர் . அதில் முதலாவதாக அனன்யா பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க அடுத்ததாக வினுஷாவும் அக்சயாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

இதையடுத்து இன்று காலை சரவண விக்ரம் பிக் பாஸ் வீட்டுக்குள் வர செம கோபத்தில் இருந்த சரவண விக்ரமை ஓடி வந்து கட்டியணைத்து கொண்டார் . இவர்களுக்குள் அப்படி என்ன சண்டை வந்தது என்று இன்று வரை பலருக்கும் புரியவில்லை.

இதையடுத்து பிக் பாஸ் குழு தற்போது வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் தலைவன் கூல் சுரேஷ் என்ட்ரி கொடுக்கிறார். டைனிங் ஏரியாவில் ஒளிந்திருந்த அவரை எகிறி குதித்து கண்டு பிடித்த மணி அவரை அன்போடு கட்டியணைத்தார்.

இதையடுத்து வழக்கம் போல் Small Boss வீட்டுக்குள் கூல் சுரேஷ் மணி விஷ்ணு அனைவரும் ஒன்று கூடி பழைய கதைகளை பேசி இந்த ப்ரோமோவும் அப்படியே முடிகிறது.

இந்நிலையில் பரபரப்பான கட்டத்தில் போட்டியாளர்கள் உள்ளே வருகை தந்திருப்பது ஏற்கனவே வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு சற்று ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது .

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top