Connect with us

“அர்ச்சனாவை மட்டம் தட்டும் வேலையில் பிக் பாஸ் Housemates! Viral Promo!”

Bigg Boss Tamil Season 7

“அர்ச்சனாவை மட்டம் தட்டும் வேலையில் பிக் பாஸ் Housemates! Viral Promo!”

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்ன கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனாவை மட்டம் தட்டும் வேலை நடப்பதாக பார்வையாளர்கள் சந்தேகப்படுகின்றனர். இன்றைய முதல் புரோமோவில் அர்ச்சனாவை பற்றி நெகட்டிவாக தினேஷ் மற்றும் மணி பேசிய காட்சிகள் இருந்தன.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவிலும் அர்ச்சனாவின் நெகட்டிவ் காட்சிகள் உள்ளன. அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தினேஷ் குறுக்கீட்டு சில கேள்விகளை கேட்கிறார். நான் பேசும்போது யாரும் குறுக்கே கேள்வி கேட்கக்கூடாது என்று அர்ச்சனா கூறிய போதிலும் விடாமல் தினேஷ் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

இதனால் கடுப்பான அர்ச்சனா பேசாமல் வெளியே போவது போல் இந்த இரண்டாவது புரோமோ முடிவுக்கு வந்துள்ளது. அர்ச்சனாவுக்கு மிகப்பெரிய நல்ல பெயர் வெளியே இருப்பதை தெரிந்து கொண்ட தினேஷ் அதை எப்படியாவது நெகட்டிவ் ஆக மாற்ற வேண்டும் என்று முயற்சிப்பது போல் தெரிகிறது.

அதற்கு சேனலும் ஒத்துப் போகிறதோ என்ற சந்தேகத்தையும் பார்வையாளர்கள் எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அர்ச்சனாவை நெகட்டிவ் ஆக மாற்றும் முயற்சியில் பலிக்குமா? அல்லது அதையும் மீறி அவர் டைட்டில் இன்னும் பட்டம் வெல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Bigg Boss Tamil Season 7

To Top