Connect with us

“பூர்ணிமாவை நாமினேட் செய்த மாயா! கதறி அழுத்த பூர்ணிமா..! வெடிக்கும் புதிய பிரச்சனை!”

Bigg Boss Tamil Season 7

“பூர்ணிமாவை நாமினேட் செய்த மாயா! கதறி அழுத்த பூர்ணிமா..! வெடிக்கும் புதிய பிரச்சனை!”

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடக்கும். போட்டியாளர்கள் கன்ஃபக்சன் அறைக்கு சென்று இரண்டு சக போட்டியாளர்களை நாமினேட் செய்வார்கள். ஆனால் இந்த வாரம் அடுத்தடுத்து திருப்பங்கள் இருக்கும் நிலையில் நாமினேஷனில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால், ஒவ்வொரு போட்டியாளர்களும் நேரடியாக நாமினேட் செய்யும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. அதில் செய்வதாக விஷ்ணு, நிக்சன், ஜோவிகா ஆகியோர் விக்ரமை நாமினேட் செய்கின்றனர். பூர்ணிமா, ஆர்ஜே அர்ச்சனா, விஷ்ணு ஆகியோர் அனன்யாவை நாமினேட் செய்கின்றனர்.

தவறாக ஜட்ஜ்மெண்ட்டுடன் அனன்யா வந்துள்ளதாக விஷ்ணு கூறுகிறார். இதனை அடுத்து பூர்ணிமாவை நாமினேட் செய்வதாக மணி, அனன்யா, மற்றும் மாயா கூறுகின்றனர். மாயா கூறும் போது ’நான் பூர்ணிமாவை நாமினேட் செய்கிறேன், ஒண்ணு நான் இருக்கணும் அல்லது அவங்க இருக்கணும் என்று சொல்கிறார்.

இதனை அடுத்து மாயா பூர்ணிமா தனியாக பேசும் போது ’இந்த வாரம் நீங்கள் கிளம்புறீங்கன்னா, என்னதான் செஞ்சுட்டு போவீர்கள் என்று கேட்க அதற்கு கண்ணீரோடு மாயாவை பூர்ணிமா பார்ப்பதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில் புல்லிங் குரூப்பின் இரண்டு தூண்களாக இருக்கும் மாயா, பூர்ணிமா இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? அவர்களது நட்பு முடிவுக்கு வந்து விட்டதா? என்பதை இன்றைய எபிசோடை பார்த்தால் தான் தெரிய வரும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிறந்தநாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு!

More in Bigg Boss Tamil Season 7

To Top