Connect with us

விசித்ரா – அர்ச்சனா இடையில் வாக்குவாதம்! சமாதானம் செய்யும் மாயா!

Bigg Boss Tamil Season 7

விசித்ரா – அர்ச்சனா இடையில் வாக்குவாதம்! சமாதானம் செய்யும் மாயா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவு என்பது சாதாரணம் என்றாலும் இந்த சீசனில் சண்டை வராத நாளை இல்லை என்று கூறலாம். குறிப்பாக அர்ச்சனா கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களிடமும் சண்டை போட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இன்று விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையே மோதல் ஏற்பட்டது என்பதும் இது குறித்த காட்சிகள் இரண்டாம் புரமோவில் இருந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்தநிலையில் அர்ச்சனாவை சமாதானப்படுத்தும் வகையில் மாயா அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். முதல் வாரம் நீங்கள் மிகவும் ஸ்ட்ராங்காக ஒன்று சொல்கிறீர்கள், நான் இப்படித்தான் என்று, ஆனால் உடனடியாக நீங்கள் அதை மாற்றிவிட்டது விசித்ராவுக்கு புரியவில்லை என்று கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா ’இத்தனை நாள் என்னிடம் பழகி இருக்காங்க, ஆனால் அதை எல்லாம் பண்ணும் போது மனசுக்குள் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே தான் பண்ணினார்களா? என்று பதில் அளிக்கிறார். அதற்கு மாயா ’நிஜமாகவே அவங்க உங்களை கூப்பிட்டு பேசுறாங்க என்றால் உங்கள் மீது அவர் அன்பு வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தம்’ என்று கூறுகிறார்.

மேலும் ‘இப்போ என்னால் அவ கூட பேச முடியுமா? அவ கோவமா இருக்காளா? என்று என்னிடம் கேட்கிறார்கள்’ என்று மாயா அர்ச்சனாவை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். அனேகமாக அவருடைய முயற்சி வெற்றியில் தான் முடியும் என்று தான் தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Bigg Boss Tamil Season 7

To Top