Connect with us

“ஒருவரின் Weakness கண்டுபிடித்து குத்து குத்துன்னு குத்தாதீங்க..! அர்ச்சனாவிடம் கொந்தளிக்கும் விக்ரம்!”

Bigg Boss Tamil Season 7

“ஒருவரின் Weakness கண்டுபிடித்து குத்து குத்துன்னு குத்தாதீங்க..! அர்ச்சனாவிடம் கொந்தளிக்கும் விக்ரம்!”

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் வெற்றி பெற்று 5 ஸ்டார்களை எடுக்க வேண்டும் என தீவிரமாக போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றிவிட்டு கடைசியாக இருக்கும் நபருக்கு தான் அந்த ஸ்டார் கிடைக்கும் என்பதால் பேசி பேசி ஒவ்வொருவராக வெளியேற்றுகின்றனர்.

இந்த நிலையில் அடுத்ததாக அர்ச்சனாவை குறி வைத்துள்ளனர். ’ஒருத்தனுடைய வீக்னசை கண்டுபிடித்து அதை குத்து குத்து என்று குத்தாதீர்கள், அது வலிக்கும்’ என்று அர்ச்சனா மீது குற்றம் காட்டுகிறார் விஜய் வர்மா.

விக்ரம் சரவணன் ’என்னை ஏன் சும்மா நான் பண்ணதையே சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்’ என்று கேட்க அதற்கு அர்ச்சனா ’உன்னை பாவமாக பார்த்தேன் என்று கூறுகிறார்’. ‘என்னை நீங்கள் பாவமாக பார்க்க வேண்டாம்’ என்று விக்ரம் சொல்ல அப்போது பூர்ணிமாவும் விக்ரமுக்கு ஆதரவாக பேசுகிறார்.

அப்போது ’எந்த இரண்டு நபர்களை வெளியேற்றப் போகிறீர்கள்’ என்று பிக் பாஸ் கேட்க அதற்கு பதில் சொல்ல போட்டியாளர்கள் தயாரான நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது. மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று யார் அந்த ஐந்து ஸ்டார்களை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

To Top