Connect with us

“மரியாதையா பேசு டா…! நிக்சனை வெளுத்துவாங்கும் அர்ச்சனா..! வெளியான Promo!”

Bigg Boss Tamil Season 7

“மரியாதையா பேசு டா…! நிக்சனை வெளுத்துவாங்கும் அர்ச்சனா..! வெளியான Promo!”

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா ’போடா’ என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் முதல் நாள் முதல் சண்டை சச்சரவு போட்டியாளர்களிடையே வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த பின் கிட்டத்தட்ட அவர் எல்லோருடனும் சண்டை போட்டுவிட்டார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை மூண்டுள்ளது.

சண்டையின் போது அர்ச்சனா, ‘வினுஷா குறித்து நீ என்ன சொன்னாய் என்பது நான் வெளியில் இருக்கும் போதே தெரியும்’ என்று கூற அதனால் ஆத்திரமடையும் நிக்சன் அதை பத்தி எல்லாம் நீ பேசாதே என்று ஆவேசமடைய, அவரை விக்ரம் சரவணன் சமாதானப்படுத்துகிறார். அப்போது அர்ச்சனா, ‘மரியாதையா பேசு, போடா’ என்று கூறியதால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிக்சன் இருக்கிறார்.

அதன் பிறகு நிக்சன் ’நீ எல்லாம் ஒரு பொண்ணே இல்லை கருமம்’ என்று கூறுவதுடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் இன்றைய எபிசோடு அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஆவேசமான சண்டை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தணிக்கைக் குழு கடும் முடிவு: ‘ஜனநாயகன்’ படத்தில் 27 காட்சிகள் நீக்கம்✂️

More in Bigg Boss Tamil Season 7

To Top