Connect with us

“கேப்டன்ஷிப்பை மாயா தவறாக Use பண்ணுகிறார்! பிக்பாஸ் வைத்த எதிர்பாராத Twist Task!”

Bigg Boss Tamil Season 7

“கேப்டன்ஷிப்பை மாயா தவறாக Use பண்ணுகிறார்! பிக்பாஸ் வைத்த எதிர்பாராத Twist Task!”

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்ட பின் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக மாயா கேப்டன் ஆக ஆனதிலிருந்து இரு அணிகள் பிக்பாஸ் வீட்டில் பிரிந்து காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக மாயா தனது கேப்டன்ஷிப்பில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்று அதுமட்டும் இன்றி ஸ்மால் ஹவுஸ் வீட்டில் உள்ளவர்களை அவமரியாதையாக நடத்துகிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிக் பாஸ் அதிரடியாக பிபி கோர்ட் என்ற டாஸ்க்கை கொண்டு வந்துள்ளார். இதில் யார் மீது வழக்கு தொடுக்க போகிறோம், என்ன வழக்கு தொடுக்க போகிறோம் என்று போட்டியாளர்கள் சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.

கேப்டன்ஷிப்பை தவறாக மாயா யூஸ் பண்ணுகிறார் என்று விசித்ரா வழக்கு தொடுக்கிறார். கேப்டனாக என்னுடைய பணியை செய்ய விட மாட்டார்கள் என்று மாயா விசித்ரா மீது வழக்கு தொடர்கிறார். இதுகுறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. மாயாவுக்கு ஆதரவாக பூர்ணிமா, சரவணன், ஆகியோர் வாதாடுகின்றனர் அதேபோல் விசித்ரா தரப்பிலும் வாதிடப்படுகிறது.

இந்த நிலையில் அர்ச்சனா மீது ஜோவிகா, மாயா மீது தினேஷ், விசித்ரா மீது பாலா ஆகியோர் வழக்கு தொடுக்கின்றனர். மொத்தத்தில் இன்றைய நீதிமன்ற டாஸ்க் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எபிசோடை பரபரப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வடசென்னை படத்தின் மூலம் சிம்புக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள்

More in Bigg Boss Tamil Season 7

To Top