Connect with us

“வீட்டுக்குள் தொடரும் பிரதீப்பின் Red Card பிரச்சனை..! Small Boss வீட்டார்களால் அதிர்ச்சியில் மாயா-பூர்ணிமா!”

Bigg Boss Tamil Season 7

“வீட்டுக்குள் தொடரும் பிரதீப்பின் Red Card பிரச்சனை..! Small Boss வீட்டார்களால் அதிர்ச்சியில் மாயா-பூர்ணிமா!”

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப் அனுப்பப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாயா – பூர்ணிமா உட்பட ஒருசிலர் குரூப் சேர்ந்து பிரதீப்பை வெளியேற்ற வேண்டும் என்று திட்டமிட்டு செய்தது போல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் மாயா – பூர்ணிமா குரூப்புக்கு பிக் பாஸ் ஆப்பு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய ப்ரோமோ வீடியோவில், ’கூல் சுரேஷ் பிரச்சனையை அப்படியே டைவர்ட் பண்ணி பிரதீப்பை வெளியே துரத்தி அடித்து விட்டீர்கள்’ என்று விசித்ரா ஆவேசமாக கூறுகிறார். அப்போது பிக்பாஸ், ‘நாமினேஷன் முடிவுகளை தெரிவித்ததோடு, ’நேற்று நடந்த ரெட் கார்ட் ஆக்டிவிட்டி ஒரு குரூப் காம்பினேஷன் போல் தெரிகிறது’ என்று கூற பூர்ணிமா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

’வுமன் கார்டு என்பது ரொம்ப பவர்ஃபுல். மனசாட்சிப்படி அந்த ரெட்கார்டை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என்றால் பிரச்சனை இல்லை, அப்படி இல்லை என்றால் நீங்கள் கண்டிப்பாக ஒருவரின் வாழ்க்கையை அழித்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்’ என ஆர்ஜே அர்ச்சனா கூற, பூர்ணிமா அதிர்ச்சி அடைகிறார்.

மொத்தத்தில் பிரதீப் ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட விவகாரம் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மாயா – பூர்ணிமா கேங் கொஞ்சம் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து திடீர் திருப்பம் ஏதும் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Padayappa மீண்டும் திரையரங்கில் – Fans Mass Celebration 💥

More in Bigg Boss Tamil Season 7

To Top